ஒரு வாரம் பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கவர்னரின் இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் டெல்லியில் தங்கி இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news