Tamilசெய்திகள்

ஒரு வாரம் உணவில்லாமல் தவித்தோம் – உக்ரைனில் இருந்து வந்த காரமடை மாணவி பேட்டி

 

உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்வி பயில சென்ற இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை இந்திய அரசு மீட்டு நாட்டிற்கு அழைத்து வருகிறது.

காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பகுதியை சேர்ந்த ஜோஸ்லின்(18) என்பவர் உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

நான் உக்ரைன் தலைநகர் கியூவில் உள்ள போகா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். போர் ஏற்பட்டதால் வெளியேற முடியாமல் கல்லூரி தங்கும் விடுதிகளில் உள்ள பதுங்கு குழியில் தங்கி இருந்தோம். ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர், உணவு கிடைக்காமல் போராடினோம். ஊருக்கு செல்வதற்கு உதவுமாறு கோரினோம்.

ஒரு வழியாக போராடி உக்ரைன் தூதரக அதிகாரிகள் மூலம் கியூவில் இருந்து இந்திய தேசிய கொடியை கையில் வைத்து கொண்டு ரெயிலில் பயணித்து போலந்து நாட்டை அடைந்தோம். அங்கிருந்து இந்திய தூதர அதிகாரிகள் தங்களை விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு இந்தியாவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு வந்துவிட்டோம்.

இன்னும் சிலர், விமான சேவை கிடைக்காமலும், உக்ரைனிலும், எல்லை நகரங்களிலும் தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.