ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் – லெஜண்ட் நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். அப்படி தற்போது அவர் கூறிய கருத்து ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிடம் செய்தியாளர் ஒருவர் ‘ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதை ஏற்றுக்கொள்வது போல பதிலளித்த அவர், ‘இது நல்ல விஷயம். ஒவ்வொரு நடிகர், நடிகையரும் இப்படிப்பட்ட ஒரு நாளை காண ஆசைப்படுவார்கள்’ என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ‘அப்படி என்றால் 60 நிமிடத்திற்கு ரூ.60 கோடியா வாங்குவார். பொய் சொல்வதற்கு அளவில்லையா?” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema