ஒரு நாள் போட்டி தொடரில் மாற்றம்! – சச்சின் கூறும் யோசனை
டெஸ்ட் கிரிக்கெட் நான்கு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஆனால் 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் இரண்டு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஒரு இன்னிங்ஸில் தவறு செய்தாலே, தோல்வியை தழுவும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 25 ஓவர்களாக பிரித்து நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘50 ஓவர் கிரிக்கெட் போட்டியை 25 ஓவர்களாக பிரித்து நான்கு இன்னிங்ஸாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் இடையில் 15 நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டும்.
ஏராளமான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளோம். இதை கொண்டு வந்தால் மிகப்பெரியதாக இருக்கும். 50 ஓவர் போட்டியில் Team A மற்றும் Team B விளையாடுகிறது என்றால், Team A டாஸ் வென்றால், முதலில் 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும்.
அதன்பிறகு Team B 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதன்பின் Team A 25 ஓவர்களில் என்ன நிலையில் இருந்ததோ, அதில் இருந்து ஆட்டத்தை தொடர வேண்டும். அதன்பின் Team B சேஸிங் செய்ய வேண்டும்.
ஒருவேளை 25 ஓவர்களுக்குள் Team A ஆல்அவுட் ஆகிவிட்டால், Team B 50 ஓவர்கள் தொடர்ச்சியாக விளையாடி டார்கெட்டை எட்ட விளையாடலாம். தற்போது ஏராளமான புதிய ஆலோசனைகள் உள்ளன. இதை 50 ஓவர் போட்டியில் நடைமுறைப்படுத்தலாம்’’ என்றார்.