X

ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஓமன் வெற்றி

ஓமன் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Tags: sports news