X

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை – விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து முன்னிலை

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று முன் தினம் முடிவடைந்த இந்தத் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்தத் தொடர் முடிந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டது, விராட் கோலி 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

பாபர் அசாம் 3-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 4-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 6-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 8 இடத்திலும், டி காக் 9-வது இடத்திலும் உள்ளனர்.

3-வது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பேர்ஸ்டோவ் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.