Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை – இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்தது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும், லபுசேன் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே எல் ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். ஆட்டநாயகன் விருது முகமது ஷமிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.