Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – 3 வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. முதல் இடத்தில் 124 ரேட்டிங் புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் 2-வது இடத்தில் 119 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் உள்ளது.

செப்டம்பர்-அக்டோபரில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை எதிர்கொள்வதால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

ஆண்களுக்கான ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்:- 1. நியூசிலாந்து – 124 2. இங்கிலாந்து – 119 3. இந்தியா – 111 4. பாகிஸ்தான் – 107 5. ஆஸ்திரேலியா – 101 6. தென்னாப்பிரிக்கா – 101 7. பங்களாதேஷ் – 92 8. இலங்கை – 92 9. வெஸ்ட் இண்டீஸ் – 71 10. ஆப்கானிஸ்தான் – 69