Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய மோசமான சாதனை

இலங்கை – இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டி டையானது. 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். 3 போட்டிகளிலும் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார். மூன்று முறை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலியை எளிதாக அவரது விக்கெட்டை இழக்க விடமாட்டார். ஆனால் இந்த 3 போட்டியிலும் ஈசியாக அவரது விக்கெட்டை இலங்கை வீரர்கள் வீழ்த்தி விட்டனர்.

முதல் இரண்டு போட்டியை விட கடைசி போட்டியில் விராட் கோலியின் பேட்டிற்கும் பந்திற்கும் அதிக இடைவேளி இருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாம்பவான் பேட்டரான அவர் பந்தை கணித்து பேட்டை வைத்தாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.