X

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த பாபர் அசாம்

விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த 4 வீரர்களாக அறியப்பட்ட நிலையில், அவர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் இணைந்துவிட்டார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி ரன்களை குவிப்பதுடன், சாதனைகளையும் படைத்துவருகிறார். பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3696 ரன்களையும், 100 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5089 ரன்களையும், 104 டி20 போட்டிகளில் ஆடி 3485 ரன்களையும் குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவந்த நிலையில், பாபர் அசாம், கோலியின் சாதனைகளையும் சேர்த்து முறியடித்து வருகிறார். அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணி 4-1 என ஒருநாள் தொடரை வெல்ல உதவினார்.

முதல் 4 போட்டிகளில் நன்றாக ஆடிய பாபர் அசாம், தனது 100-வது ஒருநாள் போட்டியாக அந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியை ஆடிய பாபர் அசாம், அந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். ஆனால் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிகமான ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

100 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களுடன் 59.17 என்ற சராசரியுடன் 5089 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் 2-ம் இடத்தில் ஹாஷிம் ஆம்லா (4808) மற்றும் 3-ம் இடத்தில் ஷிகர் தவான்(4309) ஆகிய இருவரும் உள்ளனர்.