X

ஒத்திவைப்பு தீர்மானம்! – மீண்டும் மனு கொடுத்த காங்கிரஸ்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்புநீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Tags: south news