Tamilசினிமா

ஒடிடி-யில் வெளியாகும் பரத்தின் ‘நடுவன்’

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பரத். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘நடுவன்’. இப்படத்தை ஷரங் இயக்கி இருக்கிறார். ஆச்சர்யங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்த திரில் திரைப்படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.