X

ஒடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் வந்தது. தற்போது அவரது நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட ஓ.டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார். ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை விலைக்கு வாங்கி இருக்கிறார். கூழாங்கல் படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார். விரைவில் இப்படங்களின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.