Tamilசினிமா

ஒடிடியில் வெளியாகும் இயக்குநர் வெங்கட் பிரபு படம்

இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி  சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், கொரோனா காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர்.