ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரம் கணக்கில் டிக்கெட்டுகள் ரத்து – ரெயில்வே துறை விளக்கம்

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும், மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியது.

இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது. டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது” என கூறியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools