Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் தொடரில் சிறந்த பந்து வீச்சு – பும்ராவுக்கு 5வது இடம்

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஐ.பி.எல். சீசனில் இது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஒட்டு மொத்த ஐ.பி.எல்.லில் 5-வது சிறந்த பந்து வீச்சாகும்.

அல்ஜாரி ஜோசப் 12 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த நிலையாகும். அதற்கு அடுத்த படியாக சோகைல் தன்வீர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 19 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், கும்ப்ளே 5 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.