ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற
சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் களமிறங்கிய பனுகா ராஜபக்சே 9 ரன்னில்
வெளியேறினார்.
இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. லிவிங்ஸ்டன், 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தவான் 33
ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 26 ரன்னுடன் வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது.
துவக்க வீரர்கள் ராபின் உத்தப்பா 13 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிபட்சமாக சிவம் துபே 57 ரன்கள் குவித்தார். சென்னை அணி 18
ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.