X

ஐ.பி.எல் கிரிக்கெட் – லக்னோவிடம் தோல்வியடந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன் எடுத்து அவுட்டாகாமல்
இருந்தார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இஷான் கிஷண் 13 ரன்னிலும், பிரெவிஸ் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா ஜோடி 26 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் பொல்லார்டு, உனத்கட்டும் போராடினர்.

இறுதியில், மும்பை அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் மும்பை அணி தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்துள்ளது.

லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.