X

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடக்கும் இடம் அறிவிப்பு

ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலால் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் .

அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும், மே 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில்
அகமதாபாத்தில் இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் என தெரிவித்துள்ளார் .

பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.