ஐ.பி.எல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல். போட்டி தொடரில் 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஷ்ரேயஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடினர். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஐதராபாத் சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும்,
உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்னுடன், கேப்டன் வில்லியம்சன் 17 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 36 பந்துகளில் 68 ரன்களை அடித்து கடைசிவரை களத்தில்
இருந்தார்.

ஐதராபாத் அணி 17.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools