ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 65 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி வீரர் ஷிகர் தவான் 62 ரன்களும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தனர். பானுகா ராஜபக்சே 40 ரன்கள் எடுத்தார்.