உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
2024 சீசனில் விளையாட தேவையான வீரர்களை எடுப்பதற்கான ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வீரர்களை ஏலம் எடுப்பார்கள். ஏலம் விடும் நபர் (தொகுப்பாளர்) இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். தன்னுடைய அசாத்திய திறமையால் வீரர்களின் ஏலத்தை சில சமயம் அதிகரிக்கக் கூட செய்வர். கடந்த அண்டு ஹக் எட்மேட்ஸ் ஏலத்தை தொகுத்து வழங்கினார்.
ஆனால் இந்த முறை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். ப்ரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் இவர்தான் தொகுதி வஙழகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் 333 பேர் வீரர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது. இதில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ஜடேஜா ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.