X

ஐ.நா சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது

ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் சுக்ரம் பேசினார். இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.

அவர் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு நிரந்தரப் பிரதிநிதி (பாகிஸ்தான் தூதர்) முன் வைத்து உள்ள தேவையற்ற மற்றும் வழக்கமான கருத்துக்களை நிராகரிக்க சில வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டேன். அதற்கு பதில் அளித்து நான் அவர்களை கண்ணியப்படுத்த மாட்டேன். சர்வதேச கவனத்தை கவர பாகிஸ்தான், ஐ.நா. கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, சர்வதேச சமூகம் வெளிபடையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும். கடன் பொறிகளின் தீய சுழற்சிக்கு வழிவகுக்கும் நிதியுதவியின் ஆபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா கடன்களை கொடுத்து தனது பொறியில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil news