ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 7 பேர் கைது!

இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பில் இருந்தது தெரியவந்ததையடுத்து அவர்கள் 7 பேரும் தேசிய சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools