ஐ.எஸ்.எல் கால்பந்து – 50வது லீக் போட்டியில் சென்னை தோல்வி

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய மும்பை அணி வீரர்களில் 27-வது நிமிடத்தில் ராய்னியர் பெர்னாண்டஸ், 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர். பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் (53 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (14 முறை) சென்னை அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை.

முடிவில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மும்பை அணி 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதே சமயம் ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று வெறும் 5 புள்ளி மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள சென்னை அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools