X

ஐ.எஸ்.எல் கால்பந்து – மும்பை, கொல்கத்தா இடையிலான போட்டி டிராவானது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 38வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் சூசைராஜ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில்
கொல்கத்தா 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் 62வது நிமிடத்தில் பிரதிக் சவுதான் ஒரு கோலும், 93வது நிமிடத்தில் செஜ் கெவின் ஒரு கோலும் அடித்தனர்.

இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஆட்டத்தின் கடைசியில் 96வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணி விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி, 2 சமன் என 11 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Tags: sports news