10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் மும்பை வீரர் மோடோ சுகான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் மும்பை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது..
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் அமின் செர்மிட்டி ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் மும்பை அணி தான் ஆடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என19 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என மொத்தம் 22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.