X

ஐ.எஸ்.எல் கால்பந்து – புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூர்

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

23வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டேஷ்ரோன் பிரவுன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மற்றொரு வீரர் ராகுல் பேக் மேலும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுனில் சேத்ரி மற்றொரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பெங்களூரு எப் சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 25 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.

Tags: sports news