ஐ.எஸ்.எல் கால்பந்து – நார்த் ஈஸ்ட் யுனைடெட், கோவா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி மற்றும் எப்.சி கோவா அணிகள் மோதின.
கோவா அணியின் ஹியூகோ பவ்மாஸ் 31-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் பதிலுக்கு 2 கோல்கள் அடித்து அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில், கோவா அணியின் மன்வீர் சிங் 95வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, நார்த் ஈஸ்ட் – கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.