ஐ.எஸ்.எல் கால்பந்து – ஒடிசாவை வீழ்த்து பெங்களூர் வெற்றி

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி., பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களுரு அணியின் ஜுனான் 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் ஒடிசா அணி வீரர்களின் ஆட்டம் எடுபடவில்லை. அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இறுதியில், பெங்களூரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news