ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் தெலுங்குப் படங்கள்!
‘கனா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் ‘வேல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
தற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ் மேச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.