ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகிறது

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, புஷ்கர் – காயத்ரி ‘சுழல்’ இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema