X

ஐரோப்பிய ஆணைய தலைவர் இந்தியா வந்தடைந்தார்

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்குஅதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா வந்துள்ள உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.