ஐரோப்பாவில் நடக்கும் சோம்பேறி குடிமகன் போட்டி

ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த மாதம் தொடங்கி 26 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பங்கேற்போர் 24 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து நடக்கவோ அல்லது உட்காரவோ அனுமதி கிடையாது. அதிக நேரம் படுத்தே இருப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியின் தொடக்கத்தில் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டனர்.

விதிப்படி, போட்டியாளர்கள் படுத்துக் கொண்டே உணவு மற்றும் குளிர்பானங்களை குடிக்கலாம். செல்போன் பயன்படுத்தலாம். ஆனால் எழுந்து அமரக்கூடாது. ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறைக்கு செல்ல மட்டும் அனுமதி உண்டு.

இந்த முறை போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் பரிசு காத்திருக்கிறது. கடந்த ஆண்டு 117 மணி நேரம் படுத்தே இருந்து ஒரு வாலிபர் சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news