ஐபிஎல் 2024 – மும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோரின் அரைசதத்தால் இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், ஹெட் 62 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் 3 ஓவரில் மும்பை 50 ரன்களை கடந்தது.

அதிரடியாக விளையாடி இஷான் 34 ரன்னிலும் ரோகித் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து நமன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 14 பந்தில் 30 ரன்கள் குவித்த நமன் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மந்தமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 24 ரன்களில் வெளியேறினார். இறுதி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்- டிம் டேவிட் முடிந்த அளவுக்கு வெற்றிக்கு போராடினர். இறுதியில் ஐதராபாத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools