ஐபிஎல் 2024 – புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது.
ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடம் வகிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவிற்கு அடுத்த இடமான 3-வது இடத்தை பிடித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே (ரன்ரேட்= +0.529), லக்னோ (ரன்ரேட்= +0.123), குஜராத் (ரன்ரேட்= -1.055) அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
மும்பை 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.133) 7-வது இடத்தையும், டெல்லி 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.477) 8-வது இடத்தையும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மூலம் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றி மூலம் கடைசி இடததை பிடித்துள்ளது.