ஐபிஎல் 2024 – பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் வெற்றி
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2 வது போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். சகா 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சுப்மன் கில்- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த மில்லர் 4 ரன்னிலும் மந்தமாக விளையாடிய சுதர்சன் 34 பந்துகளில் 31 ரன்களில் வெளியேறினார்.
இந்த நிலையில் ஷாருக்கான் – தெவாட்டியா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.