ஐபிஎல் 2024 – டெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- ப்ரித்விஷா களமிறங்கினர். வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா -போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools