ஐபிஎல் 2024 – சென்னை சேப்பக்காத்தில் 28 ஆம் தேதி நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 25 ஆம் தேதி தொடங்குகிறது
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.