Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2023 – டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய சீறுடை அறிமுகம்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த வருட ஐ.பி.எல். தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து நடப்பாண்டு ஐ.பி.எல். தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான புதிய சீருடையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னரும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.