X

ஐபிஎல் வீரர்களுக்கு அட்வைஸ் செய்த ஆஇஷிஷ் நெஹ்ரா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் வரும் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந்தேதி கரீபியன் பிரிமீயர் லீக் நடக்கிறது.

இந்த தொடரில் பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்), இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் பயனளிப்பதாக இருக்கும் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள், அங்கு காட்டிய திறமையை அப்படியே ஐபிஎல் தொடரில் காட்டுவார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால், மற்ற வீரர்களை காட்டிலும் நிச்சயம் பயனடைவார்கள்.

ஒரு மாத காலம் விளையாடிய பின், ஐக்கிய அரபு அமீரகம் வரும்போது பொல்லார்டு, இம்ரான் தாஹிர், ரஷத் கான் ஆகியோருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று கூட இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தினால், 18 வயது வீரர்கள் போல் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு அர்ப்பணிப்பான வீரர்.

வயதை பற்றி பேசும்போது, அதிகமான போட்டியில் விளையாடும்போது, இந்த வயதில் அதிக பயிற்சி அது எப்போதுமே சிறந்ததாக இருக்கும். கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவருக்கு சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.