X

ஐபிஎல் விதிகளை மீறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிப்பு

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் (0 ரன்) ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பட்லர் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய போது கோபத்தில் பவுண்டரி எல்லைக்கோட்டை பேட்டால் அடித்தார். இதன் காரணமாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் லெவல் 1 குற்றங்கள் பொதுவாக கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் அல்லது மைதான பொருத்துதல்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வதை உள்ளடக்கியது; நடவடிக்கை அல்லது வாய்மொழி துஷ்பிரயோகம் மூலம் நடுவரின் முடிவில் எதிர்ப்பை வெளிப்படுத்துதல், ஆபாசமான, புண்படுத்தும், அல்லது அவமதிக்கும் மொழியைப் பயன்படுத்துதல் மற்றும்/அல்லது ஒரு ஆபாசமான சைகை செய்தல் மற்றும் அதிகப்படியான கவர்ச்சியில் ஈடுபடுதல் அல்லது பெவிலியன்/டிரஸ்ஸிங் ரூம் ஷெட்களை நோக்கி ஆக்ரோஷமாக சைகை செய்தல் அல்லது ஆக்ரோஷமாக அல்லது ஏளனமாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றங்கள் லெவல் 1 குற்றங்களாக உள்ளதாக கூறப்படுகிறது.