Tamilவிளையாட்டு

ஐபிஎல் போட்டி டிக்கெட் காட்டினால் இலவச பேருந்து பயணம் – தமிழக அரசு சலுகை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு, போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லலாம். இச்சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.