ஐபிஎல் போட்டியில் விளையாட தடையில்லா சான்றிதழ்! – அல் ஹசனுக்கு வங்காள தேச அணி வழங்கியது

வங்காளதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன். 31 வயதாகும் இவர் வங்காளதேசத்தில் நடைபெற்ற வங்காளதேச பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

இதனால் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், வங்காளதேசம் அயர்லாந்தில் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மே 7-ந்தேதி தொடங்குகிறது. அப்போது தேவைப்பட்டால் சாகிப் அல் ஹசனை தேசிய அணிக்கு அழைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news