ஐபிஎல் போட்டியில் பென் ஸ்டோக் பந்து வீச மாட்டார் – சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல்.போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பந்து வீச மாட்டார் என பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். அவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் பேட்டராக மட்டுமே பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools