X

ஐபிஎல் போட்டியின் போது இந்திய வீரர்கள் டியூக்ஸ் பந்தில் பயிற்சி மேற்கொண்டனர் – அக்சர் படேல் தகவல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.