X

ஐபிஎல் போட்டிக்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள டோனி – வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 17-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரையில் விளையாடிய 16 சீசன்களில் சென்னை, மும்பை அணிகள் 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இதுவரையில் ஓய்வில் இருந்து வந்த டோனி தற்போது ஜிம் ஒர்க் அவுட் மற்றும் பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அவர் ராஞ்சியில் பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 42 வயதாகும் டோனி இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி சீசன் என்பதால், இந்த சீசனை வெற்றியோடு முடிக்க டோனி தீவிரமாக இருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Tags: tamil sports