X

ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்.9 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.