X

ஐபிஎல் தொடரில் மற்றொரு மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

Indian cricket captain Rohit Sharma celebrates after scoring 100 runs during the Asia Cup 2018 cricket match between India and Pakistan at Dubai International cricket stadium,Dubai, United Arab Emirates. 09-23-2018 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 6 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

இந்த சீசனில் நடந்த 11 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 10 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காராராகி உள்ளார் ரோகித் சர்மா. அவர் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

ஐபிஎல்-லில் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. அவர் இதற்கு முன்பு 2017 ல் நடந்த ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருந்தார்.

ஆனால், தற்போது 5 போட்டிகளில் 2(8), 3(5), 0(3), 0(3), 7(8) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டானாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால், 200 ரன்கள் இலக்கை எளிதில் கடந்து மும்பை வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.