X

ஐபிஎல் தகுதிச் சுற்றுப் போட்டி – மும்பை, டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன் தினம் லீக் போட்டிகள் முடிந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.

2-வது இடத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் (16 புள்ளி), 3-வது இடத்தை ஐதராபாத் அணியும் (14 புள்ளி), 4-வது இடத்தை பெங்களூர் அணியும் (14 புள்ளி) பிடித்தன. இதன் மூலம் இந்த 4 அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளேஆப் சுற்று தொடங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி வெளியேற்றுதல் சுற்றில் வெல்லும் அணியுடன் முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணி இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

துபாயில் இன்று நடக்கும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. 6-ந் தேதி நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் 3 மற்றும் 4-வது இடத்தை பிடித்த ஐதராபாத், பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8-ந் தேதி 2-வது தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது. இறுதிப்போட்டி 10-ந் தேதி துபாயில் நடக்கிறது.